செய்திகள்
கொரோனா வைரஸ் பரிசோதனை

ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா

Published On 2020-08-02 01:13 IST   |   Update On 2020-08-02 01:13:00 IST
ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அமராவதி:

இந்தியாவில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் வேகமாக பரவி வருகிறது. கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து கொண்டே வந்தாலும், குணமடைவோர் விகிதமும் அதிகரித்தே காணப்படுவது நம்பிக்கையளிப்பதாக உள்ளது.

கொரோனா பரவலைக் கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகளை மத்திய மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. எனினும், கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்தபாடில்ல. ஆந்திராவில் கடந்த 24 மணி நேரத்தில் 9,276 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.  இந்நிலையில் கொரோனாவால் பாதிப்படைந்தோர் எண்ணிக்கை 1,50,209-ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றால் உயிரிழப்பு எண்ணிக்கை 1,407 ஆக உள்ளது.   கடந்த 24 மணி நேரத்தில் 12,750 பேர் கொரோனாவில் இருந்து குணமடைந்த நிலையில் தொற்றிலிருந்து 76,614 பேர் குணமடைந்து சென்றுள்ளதாக  ஆந்திர சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.  ஆந்திராவில் இதுவரை 20,12,573 கொரோனா மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.

Similar News