செய்திகள்
தீப்பிடித்த கட்டிடத்தில் இருந்து வெளியேறிய புகை

டெல்லி ரோகிணி நீதிமன்றத்தில் திடீர் தீ விபத்து- ஆவணங்கள் கருகின

Published On 2020-06-18 12:25 IST   |   Update On 2020-06-18 12:25:00 IST
தலைநகர் டெல்லி ரோகிணியில் உள்ள நீதிமன்ற கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது.
புதுடெல்லி:

தலைநகர் டெல்லியின் ரோகிணி பகுதியில் நீதிமன்ற வளாகம் உள்ளது. இந்த கட்டிடத்தின் மூன்றாவது தளத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது. ஆவணங்கள் வைக்கப்பட்டுள்ள அறையில் முதலில் தீப்பிடித்ததாக தெரிகிறது. பின்னர் அருகில் உள்ள அறைகளுக்கும் பரவி உள்ளது.

தீ விபத்து குறித்து தகவல் அறிந்த தீயணைப்பு வீரர்கள், 9 வாகனங்களில் சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

தீ விபத்தில் ஏராளமான ஆவணங்கள் கருகி சேதமடைந்தன. விபத்துக்கன காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Similar News