செய்திகள்
முக கவசம் வழங்கும் மம்தா பானர்ஜி

மத்திய குழுவுக்கு ஒத்துழைப்பு அளிப்போம்- உள்துறைக்கு உறுதி அளித்தது மேற்கு வங்காளம்

Published On 2020-04-22 06:59 GMT   |   Update On 2020-04-22 06:59 GMT
ஊரடங்கை அமல்படுத்தும் விதம் குறித்து ஆய்வு செய்ய மத்திய அரசு நியமித்துள்ள குழுவுடன் மேற்கு வங்காள அரசு ஒத்துழைக்கும் என மத்திய உள்துறை அமைச்சகத்திற்கு உறுதி அளிக்கப்பட்டுள்ளது.
கொல்கத்தா:

மகாராஷ்டிரா, ராஜஸ்தான், மத்திய பிரதேசம், மேற்கு வங்காளம் ஆகிய மாநிலங்களில் ஊரடங்கை அமல்படுத்தப்படும் விதம் குறித்து, நிலைமையை நேரில் ஆய்வு செய்ய அமைச்சகங்களுக்கு இடையேயான குழுக்களை மத்திய அரசு அமைத்தது.

இந்த குழுக்கள் ஊரடங்கு கட்டுப்பாடுகளை தீவிரமாக அமல்படுத்துவது, சமூக விலகல், அத்தியாவசிய பொருட்கள் சப்ளையை உறுதி செய்வது, சுகாதார கட்டமைப்புகள், சுகாதார ஊழியர்களின் பாதுகாப்பு, தொழிலாளர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள நிவாரண முகாம்களின் நிலைமை தொடர்பான சிபாரிசுகளை மத்திய அரசுக்கு வழங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கு மேற்கு வங்காள முதல்-மந்திரி மம்தா பானர்ஜி எதிர்ப்பு தெரிவித்து உள்ளார்.

இதையடுத்து ஆய்வுக் குழுவுடன் மேற்கு வங்காள அரசு ஒத்துழைக்கவில்லை என்று குற்றம்சாட்டி, அந்த மாநில தலைமைச் செயலாளர் ராஜீவ் சின்காவுக்கு மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லா கடிதம் எழுதியிருந்தார். 

மாநில அரசின் இந்த செயல்பாடு தேசிய பேரிடர் மேலாண்மை சட்டத்தையும் இது தொடர்பாக சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவையும் மீறும் வகையில் அமைந்து உள்ளது. எனவே மத்திய அரசின் குழுவுக்கு அவர்கள் கடமையை ஆற்றும் வகையில் அனைத்து ஒத்துழைப்பையும் அளித்து தேவையான ஏற்பாடுகளை மாநில அரசு செய்ய வேண்டும் என்று உள்துறை செயலாளர் கூறிருந்தார்.

இதையடுத்து மத்திய உள்துறை செயலாளர் அஜய் பல்லாவுக்கு மாநில தலைமைச் செயலாளர்  ராஜீவ் சின்கா பதில் கடிதம் அனுப்பி உள்ளார். அதில், மத்திய குழுவுக்கு மாநில அரசு ஒத்துழைப்பு வழங்கவில்லை என்று கூறுவது உண்மையல்ல என்று கூறியுள்ளார்.

‘மத்திய மத்திய அரசின் ஒரு குழுவை இரண்டு முறை சந்தித்து ஆலோசனை நடத்தி உள்ளேன். மற்றொரு குழுவுடனும் தொடர்பில் இருக்கிறேன். பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மத்திய அரசின் உத்தரவுகளையும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளையும் செயல்படுத்துவதற்கு உத்தரவாதம் அளிக்கிறேன்’ என தலைமைச் செயலாளர் தனது கடிதத்தில் கூறியுள்ளார்.
Tags:    

Similar News