செய்திகள்
மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன்

ஊரடங்கை நீட்டிக்க 3 வார கால அவகாசம் கேட்கும் மாநில அரசுகள்- மத்திய மந்திரி

Published On 2020-04-10 11:23 GMT   |   Update On 2020-04-10 11:23 GMT
கொரோனா பாதிப்பு குறைய பல்வேறு மாநிலங்கள் ஊரடங்கை நீட்டிக்க மேலும் 3 வார காலம் அவகாசம் கேட்கின்றன என்று மத்திய மந்திரி ஹர்ஷ வர்தன் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

கொரோனா வைரஸ் பரவலின் தாக்கம் குறையாததால் ஊரடங்கை நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநிலங்களில் இருந்து கோரிக்கைகள் வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் இன்று மத்திய சுகாதாரத் துறை மந்திரி ஹர்ஷ வர்த்தன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

கொரோனா வைரஸ் பரவலைக் கட்டுப்படுத்த இன்னும் 3 வாரங்கள் ஊரடங்கு நீட்டிக்க வேண்டும் என்று பல்வேறு மாநில அரசுகள் கோரிக்கை விடுத்துள்ளன.

உங்கள் மாநிலங்களில் ஊரடங்கு உத்தரவை 100 சதவீதம் பின்பற்றப்படுவதை உறுதி செய்ய அனைத்து மாநிலங்களின் சுகாதார அமைச்சர்களையும் கேட்டுக்கொள்கிறேன். இதில் நாம் பின்தங்கியிருந்தால் கொரோனா வைரசுக்கு எதிரான இந்த போராட்டத்தில் வெற்றி பெறுவது கடினமாக இருக்கும்

அனைத்து மாநில அரசுகளும் ஊரடங்கை முழுமையாக கடைப்பிடிக்க வேண்டும். சில மாநிலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் காண முடிகிறது. ஆனால், ஊரடங்கின் 3-வது வாரத்தில் நாம் உள்ளோம். கொரோனா பாதிப்பு  குறைய 5 முதல் 6 வாரங்கள் தேவை என்று சர்வதேச அனுபவங்கள் பரிந்துரைக்கிறது என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News