செய்திகள்
கோப்புபடம்

மும்பை தாராவியில் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை நடத்த திட்டம்

Published On 2020-04-10 11:13 IST   |   Update On 2020-04-10 11:13:00 IST
மும்பை தாராவியில் கொரோனா வைரஸ் சமூக பரவல் நிலையை எட்டுவதை தவிர்ப்பதற்காக அனைத்து மக்களுக்கும் கொரோனா குறித்த பரிசோதனை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.
மும்பை:

இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிக பாதிப்பை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிராவில் 1364 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 97 பேர் உயிரிழந்துள்ளனர்.

உலகின் மிக பெரிய குடிசைப் பகுதியான  மும்பை தாராவியில் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. தாராவியில் இன்று மேலும் 5 பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதன் மூலம் அப்பகுதியில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 ஆக அதிகரித்துள்ளது. 3 பேர் உயிரிழந்துள்ளனர்.

தாராவியில் கொரோனா வைரஸ் பரவத் தொடங்கியிருப்பதால் சமூக பரவலை தடுக்க மாநகராட்சி அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அடுத்த 15 நாட்களுக்குள் தாராவியில் உள்ள 7.5 லட்சம் குடியிருப்பாளர்களுக்கும் கொரோனா பரிசோதனை நடத்த மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் மக்கள் தொகை அதிகம் உள்ள தாராவியில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட முதல்நபர் கண்டறியப்பட்ட பிறகு, ஆயிரக்கணக்கான மக்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். பல இடங்களில் தனிமைப்படுத்தப்பட்டு சீல் வைக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் மருத்துவ முகாம் அமைக்கப்பட்டு மக்களுக்கு மருத்துவ பரிசோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.

Similar News