செய்திகள்
சித்தராமையா

இடைத்தேர்தலுக்கு பிறகு எடியூரப்பா வீட்டுக்கு செல்வது உறுதி: சித்தராமையா

Published On 2019-11-25 02:08 GMT   |   Update On 2019-11-25 02:08 GMT
இடைத்தேர்தலுக்கு பிறகு எடியூரப்பா வீட்டுக்கு செல்வது உறுதி என்று காங்கிரஸ் கட்சியின் எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு :

கர்நாடக சட்டசபையில் காலியாக உள்ள 15 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் வருகிற 5-ந் தேதி நடக்கிறது. இடைத்தேர்தல் களத்தில் 165 வேட்பாளர்கள் உள்ளனர். தேர்தல் பிரசாரம் சூடுபிடித்துள்ளது. கட்சிகளின் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டுள்ளனர். ஒசக்கோட்டையில் நேற்று நடைபெற்ற காங்கிரஸ் தேர்தல் பிரசாரத்தின்போது, எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா பேசியதாவது:-

கர்நாடகத்தில் 17 எம்.எல்.ஏ.க்கள் தங்களது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தனர். அவர்கள் பா.ஜனதாவின் குதிரை பேரத்தில் விலைபோய் ராஜினாமா செய்தனர். இதன் காரணமாக இடைத்தேர்தல் வந்தது. ஒசக்கோட்டை தொகுதியில் பா.ஜனதா சார்பில் போட்டியிடும் எம்.டி.பி.நாகராஜ், தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்.எல்.ஏ. ஆவார். அவருக்கு காங்கிரஸ் கட்சியில் வாரிய தலைவர் பதவி, மந்திரி பதவி ஆகியவற்றை வழங்கினோம். 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தார். இதை விட அவருக்கு வேறு என்ன பதவி கிடைக்கும்?. முதல்-மந்திரி பதவி தான் இருந்தது.



கர்நாடக சட்டசபை இடைத்தேர்தலுக்கு பிறகு  வீட்டுக்கு செல்வது உறுதி. 15 தொகுதிகளில் காங்கிரஸ் கட்சி 12 தொகுதிகளில் வெற்றி பெறுவது உறுதி. காங்கிரஸ் ஆட்சி மீண்டும் அமைந்தால் ரேஷன் கடைகளில் ஏழை மக்களுக்கு வழங்கப்படும் ரேஷன் அரிசி, 10 கிலோவாக உயர்த்தப்படும்.

நான் கடன் வாங்கியதாகவும், அதை திருப்பி தரவில்லை என்றும் எம்.டி.பி.நாகராஜ் சொல்கிறார். நான் எதற்காக அவரிடம் கடன் வாங்க வேண்டும்?. அவர் தேர்தல் நேரத்தில் வாக்காளர்களை கவர இவ்வாறு பொய்யான தகவல்களை வெளியிட்டு வருகிறார். இந்த தொகுதி வாக்காளர்கள், அவருக்கு தக்க பாடம் புகட்ட வேண்டும்.

இவ்வாறு சித்தராமையா பேசினார்.

இந்த பிரசாரத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் யாரும் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News