செய்திகள்
சஞ்சய் ராவத்

சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு உள்ளது: சஞ்சய் ராவத்

Published On 2019-11-25 02:00 GMT   |   Update On 2019-11-25 02:00 GMT
சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணிக்கு 165 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு இருப்பதாக சஞ்சய் ராவத் எம்.பி. கூறினார்.
மும்பை :

மகாராஷ்டிராவில் பாரதீய ஜனதாவை ஆட்சி அமைக்க வைத்ததன் மூலம் கவர்னர் தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தியதாக சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தன.

இந்தநிலையில், சிவசேனா எம்.பி. சஞ்சய் ராவத் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

அஜித்பவார் கொடுத்த போலி ஆவணங்கள் அடிப்படையில் கவர்னர் பகத்சிங் கோஷ்யாரி பாரதீய ஜனதா தலைமையில் ஆட்சி அமைய அனுமதித்து விட்டார்.

அந்த கட்சி பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு 30-ந் தேதி வரை அவகாசம் கொடுத்து உள்ளார்.

இதன் மூலம் பாரதீய ஜனதா பெரும்பான்மையை நிரூபிப்பதற்கு எதிர்க்கட்சிகளை சேர்ந்த எம்.எல்.ஏ.க்களை இழுக்க வசதி செய்து கொடுக்கப்பட்டு உள்ளது.



சிவசேனா, தேசியவாத காங்கிரஸ், காங்கிரஸ் கட்சிகளிடம் 165 எம்.எல்.ஏ.க்கள் உள்ளனர். கவர்னர் எம்.எல்.ஏ.க்களை அடையாளப்படுத்த அழைத்தால் நாங்கள் 10 நிமிடத்தில் பெரும்பான்மையை நிரூபிப்போம்.

கடைசி நேரத்தில் பாரதீய ஜனதாவிடம் சரண் அடைந்து, சரத்பவாருக்கு அஜித்பவார் செய்த துரோகத்தின் மூலம் வாழ்க்கையில் அவர் மிகப்பெரிய தவறு இழைத்து விட்டார். நவம்பர் 23-ந் தேதி மராட்டிய வரலாற்றில் ‘கருப்பு நாள்’. முன்னாள் பிரதமர் இந்திராகாந்தி அவசர நிலையை அமல்படுத்தியதை கருப்பு நாள் என சொல்வதற்கு பாரதீய ஜனதாவுக்கு எந்த உரிமையும் இல்லை.

பாரதீய ஜனதாவுக்கு பெரும்பான்மை இருந்து இருந்தால் ஏன் ரகசியமாக பதவி ஏற்கவேண்டும். சிவசேனா ஆட்சி அமைக்க உரிமை கோரியபோது 24 மணி நேரம் மட்டுமே அவகாசம் கொடுத்த கவர்னர், தற்போது பாரதீய ஜனதாவுக்கு போதிய நேரம் கொடுத்து ஒருதலைபட்சமாக நடந்து கொண்டார்.

இவ்வாறு அவர் கூறினார். 
Tags:    

Similar News