செய்திகள்
பிரதமர் மோடி, ஜெய்ர் போல்சோனரோ சந்திப்பு

குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார் பிரேசில் அதிபர்

Published On 2019-11-14 22:33 IST   |   Update On 2019-11-14 22:33:00 IST
இந்தியாவில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள குடியரசு தினவிழாவில் பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ சிறப்பு விருந்தினராக பங்கேற்கிறார்.
புதுடெல்லி:

இந்திய குடியரசு தின விழா அடுத்த ஆண்டு (2020) ஜனவரி 26-ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக பிரேசில் அதிபர் ஜெய்ர் போல்சோனரோ கலந்து கொள்கிறார். 

பிரேசிலில் நடைபெற்று வரும் பிரிக்ஸ் நாடுகளின் 11-வது உச்சி மாநாட்டில் பங்கேற்றுள்ள நரேந்திர மோடி பிரேசில் அதிபரை நேரில் சந்தித்து அழைப்பு விடுத்தார். அப்போது, பன்முகத்தன்மையுடன் கூடிய ஒத்துழைப்பு உள்ளிட்டவை குறித்து இரு தலைவர்களும் ஆலோசித்தனர்.

பிரதமர் மோடியின் அழைப்பை பிரேசில் அதிபர் மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொண்டார் என்று சந்திப்பு குறித்து வெளியிடப்பட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Similar News