செய்திகள்
லதா மங்கேஷ்கர்

பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் சிகிச்சைக்கு பின்னர் வீடு திரும்பினார்

Published On 2019-11-11 12:13 GMT   |   Update On 2019-11-11 13:55 GMT
‘இந்தியாவின் நைட்டிங்கேல்’ என்றழைக்கப்படும் பிரபலப் பாடகி லதா மங்கேஷ்கர் மூச்சுத்திணறலுக்காக மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்
மும்பை:

லதா மங்கேஷ்கர் இந்தி மொழியில் மட்டும் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்கள் பாடியுள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் 28-ம் தேதி தனது 90-வது பிறந்தநாளை லதா கொண்டாடினார்.

இந்நிலையில், மூச்சுத்திணறல் காரணமாக இன்று அதிகாலை 2 மணியளவில் மும்பையில் உள்ள பிரீச் கேண்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சைப்பிரிவில் இருக்கும் அவரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், இன்று மாலை உடல்நிலை சற்று தேறியதும் லதா மங்கேஷ்கர் வீடு திரும்பினார். அவர் ஓய்வெடுத்து வருவதாக லதா மங்கேஷ்கரின் சகோதரி உஷா மங்கேஷ்கர் குறிப்பிட்டுள்ளார்.

லதா மங்கேஷ்கர் 36 இந்திய மொழிகளிலும், சில வெளிநாட்டும் மொழிகளிலும் சுமார் 30ஆயிரம் பாடல்கள் பாடியுள்ளார். பத்மபூஷன், பத்மவிபூஷன் ஆகிய விருதுகள் பெற்ற இவருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதும் வழங்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News