செய்திகள்
நிர்மலா சீதாராமன்

ஆட்டோமொபைல் துறை சரிய ஓலா, ஊபர்தான் காரணம் -நிர்மலா சீதாராமன்

Published On 2019-09-11 08:38 IST   |   Update On 2019-09-11 08:38:00 IST
மத்திய பாஜக அரசின் 100 நாள் செயல்பாடுகள் குறித்து நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் விளக்கம் அளித்தபோது, ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சிக்கான காரணங்களை கூறினார்.
சென்னை:

மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது மோடி தலைமையிலான மத்திய அரசு கடந்த 100 நாட்களில் செய்தது மற்றும் மத்திய அரசு மேற்கொண்ட நடவடிக்கைகள் குறித்து விளக்கினார்.

இந்த சந்திப்பில் ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்தது குறித்து அவர் கூறுகையில், ‘மோட்டார் வாகன உற்பத்தியில் உள்ள சிக்கல் குறித்து ஆலோசனை நடத்தப்பட்டுள்ளது. பல காரணங்களால் மோட்டார் வாகன உற்பத்தியில் சரிவு ஏற்பட்டுள்ளது.



முக்கியமாக பெரும்பாலான மக்களின் மனப்போக்கு, ஆட்டோமொபைல் துறையில் வாகனங்களை வாங்குவதைவிட ஓலா, ஊபர் போன்றவற்றை பயன்படுத்துவதே சிறந்தது என்றாகிவிட்டது.

மேலும் பி.எஸ்6 இந்த துறையின் வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகும். இதனை மீட்பதற்கு அரசு சில நடவடிக்கைகளை எடுத்துள்ளது. வேலையிழப்பு பிரச்சினையை சரிசெய்யவும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன’ என கூறியுள்ளார். 

Similar News