செய்திகள்
மகாத்மா காந்தி சிலை

ஆசியாவின் மிக பெரிய மதுபான கடை - பெங்களூருவில் காந்தி சிலை அருகே அமைகிறது

Published On 2019-07-02 18:27 IST   |   Update On 2019-07-02 18:27:00 IST
ஆசியாவின் மிக பெரிய மதுபான கடை பெங்களூருவில் காந்தி சிலை அருகே அமைய உள்ளது. இதற்கு கடும் எதிர்ப்பு பெருகி வருகிறது.
பெங்களூரு:

மதுப்பழக்கத்தை கடுமையாக எதிர்த்தவர் மகாத்மா காந்தி. எனவேதான் அவரது பிறந்தநாளில் மதுக்கடைகளை மூடவேண்டும் என அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் பெங்களூருவில் காந்தி சிலை அருகே ஆசியாவிலேயே மிக பெரிய மதுபான கடை அமைய உள்ளது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.



பெங்களுரு சின்னசாமி கிரிக்கெட் ஸ்டேடியம் அருகிலுள்ள காந்தி சிலை அருகே மிக பெரிய மதுபான கடை அமைய உள்ளது. இதையறிந்த சமூக ஆர்வலர் கே.எல்.சுரேஷ், இந்த மதுபான கடைக்கு அனுமதி கொடுக்கக் கூடாது. இதை முடக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதேபோல், காந்தி சிலைக்கு அருகே மதுபான கடை அமைவதற்கு பலரும் தங்களது கடும் எதிர்ப்புகளை தெரிவித்து வருகின்றனர். 

Similar News