செய்திகள்
ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி தேவஸ்தான அதிகாரிகள், வேத பண்டிதர்கள் லட்டு மற்றும் தீர்த்த பிரசாதம் வழங்கினர்.

ஆந்திர தேர்தலில் வெற்றிபெற்ற ஜெகன்மோகன் ரெட்டிக்கு ஏழுமலையான் பிரசாதம்

Published On 2019-05-25 10:39 IST   |   Update On 2019-05-25 10:39:00 IST
ஆந்திர சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்று முதல்-மந்திரியாக பதவியேற்க உள்ள ஜெகன்மோகன் ரெட்டிக்கு திருப்பதி ஏழுமலையான் பிரசாதத்தை தேவஸ்தான அதிகாரிகள் வழங்கினர்.
திருமலை:

ஆந்திராவில் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்றுள்ளது. முதல்-மந்திரியாக ஜெகன்மோகன்ரெட்டி பதவியேற்கும் நிகழ்ச்சி 30-ந்தேதி விஜயவாடாவில் உள்ள இந்திராகாந்தி நகராட்சி விளையாட்டு மைதானத்தில் காலை 10 மணியளவில் நடக்கிறது.

திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் முதன்மை செயல் அலுவலர் அனில்குமார் சிங்கால், இணை அதிகாரி சினிவாசராஜீ, டாலர் சேஷாத்திரி, பொக்கா‌ஷம் கிளார்க் குருராஜாராவ் ஆகியோர் விஜயவாடாவில் உள்ள தாடப்பள்ளியில் ஒய்.எஸ்.ஜெகன்மோகன்ரெட்டியின் வீட்டிற்கு நேரில் சென்றனர்.

ஒய்.எஸ்.ஜெகன்மோகன் ரெட்டிக்கு தேவஸ்தானம் சார்பில் சே‌ஷ வஸ்த்திரம் போர்த்தி கவுரவித்தனர். அவருக்கு லட்டு மற்றும் தீர்த்த பிரசாதம் ஆகியவற்றை வழங்கினர். வேத பண்டிதர்கள் வேத மந்திரங்களை ஓதி ஆசி வழங்கினர்.

ஜெகன்மோகன் ரெட்டியின் கையில் மஞ்சள் கயிறு கட்டினர். முதல்-மந்திரியாக பதவியேற்க இருக்கும் அவருக்கு தேவஸ்தான அதிகாரிகள் வாழ்த்து வழங்கினர்.
Tags:    

Similar News