செய்திகள்

இந்து மதத்தை இழிப்படுத்துவது கம்யூனிஸ்டுகளுக்கு பேஷன் ஆகி விட்டது - மோடி வேதனை

Published On 2019-05-06 16:54 IST   |   Update On 2019-05-06 17:58:00 IST
ராமாயணம், மகாபாராதத்தில் ரத்தம் இல்லையா, யுத்தம் இல்லையா? என்று இந்து மதத்தை இழிப்படுத்தி பேசுவது கம்யூனிஸ்டுகளுக்கு ‘பேஷன்’ ஆகி விட்டது என பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். #fashionforcommunists #derogatorylanguage #Hindureligion #Modi
கொல்கத்தா:

இந்துக்கள் வன்முறையில் ஈடுபட மாட்டார்கள் என்னும் பொருள்படும் வகையில் பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜக தலைவர்கள் பேசி வருவது தொடர்பாக சமீபத்தில் கருத்து தெரிவித்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பொதுச்செயலாளர் சீதாராம் யெச்சூரி, ‘ராமாயணம், மகாபாரதத்தில் இல்லாத வன்முறையா? அவற்றில் இல்லாத போர் முறைகளா?’ என குறிப்பிட்டிருந்தார்.

இதற்கு இன்று பதிலடி கொடுத்த பிரதமர் மோடி, இந்து மதத்தை இழிவு படுத்தி பேசுவது கம்யூனிஸ்டுகளுக்கு தற்போது பேஷன் ஆகி விட்டது என குறிப்பிட்டுள்ளார்.

மேற்கு வங்காளம் மாநிலம், ஜக்ராம் மாவட்டத்தில் இன்று நடைபெற்ற பாஜக தேர்தல் பிரசார கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி இன்று பங்கேற்று பேசினார்.

மேற்கு வங்காளம் மாநில முதல் மந்திரி மம்தா பானர்ஜி சமீபத்தில் மிட்னப்பூர் மாவட்டத்துக்கு பிரசாரம் செய்ய சென்றபோது ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிட்ட 3 பேரை போலீசார் பிடித்து சிறையில் அடைத்ததை இன்றைய பொதுக்கூட்டத்தில் சுட்டிக்காட்டிப் பேசிய மோடி, ’இந்த மேடையில் நானும் ‘ஜெய் ஸ்ரீராம்’ என்று முழக்கமிடப் போகிறேன்.

மம்தா பானர்ஜிக்கு துணிச்சல் இருந்தால் என்னை பிடித்து சிறையில் போடட்டும். அதன் மூலமாவது இந்த மாநிலத்து மக்களுக்கு திரிணாமுல் கட்சியின் ஆட்சியில் இருந்து விமோசனம் கிடைக்கட்டும்’ என்றார்.

ராமாயணம், மகாபாராதத்தில் ரத்தம் இல்லையா, யுத்தம் இல்லையா? என்று இந்து மதத்தை இழிவு படுத்தி பேசுவது கம்யூனிஸ்டுகளுக்கு ‘பேஷன்’ ஆகி விட்டது எனவும் பிரதமர் மோடி தெரிவித்தார். #fashionforcommunists #derogatorylanguage #Hindureligion #Modi

Similar News