செய்திகள்

மேற்கு வங்காளத்தில் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் கார் விபத்தில் படுகாயம்

Published On 2019-05-04 18:57 IST   |   Update On 2019-05-04 18:57:00 IST
மேற்கு வங்காளம் மாநிலத்தில் 6-ம் தேதி தேர்தலை சந்திக்கும் போன்கவுன் பாராளுமன்ற தொகுதி பாஜக வேட்பாளர் சாந்தனு தாக்குர் இன்று கார் விபத்தில் சிக்கி படுகாயமடைந்தார். #BJPcandidate #Bongaoncandidate #LSpolls #SantanuThakur #SantanuThakurinjured
கொல்கத்தா:

பாராளுமன்ற தேர்தலில் ஐந்தாவது கட்டமாக மே 6-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் உள்ள 7 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இன்று மாலையுடன் தேர்தல் பிரசாரம் ஓய்வதால் காலையில் இருந்தே வேட்பாளர்கள் அனைவரும் உச்சகட்ட பிரசாரத்தில் ஈடுபட்டனர்.

அவ்வகையில்,  போன்கவுன் (ரிசர்வ்) பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளரான
சாந்தனு தாக்குர் இன்று பிரசாரம் செய்வதற்காக கல்யானி என்ற இடத்தை நோக்கி காரில் சென்றார். பகல் 12.30 மணியளவில் ஹன்ஸ்பூர் வழியாக வந்தபோது ‘போலீஸ் வாகனம்’ என்ற ஸ்டிக்கருடன் வேகமாக வந்த மற்றொரு கார் அவரது காரின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த விபத்தில் தலையில் பலத்த காயமடைந்த சாந்தனு தாக்குர் அருகாமையில் உள்ள மருத்துவமையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து பற்றிய தகவலறிந்து அங்கு விரைந்துவந்த பாஜகவினர் கைகட்டா-ஹன்ஸ்பூர் நெடுஞ்சாலையின் குறுக்கே அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர். #BJPcandidate #Bongaoncandidate #LSpolls #SantanuThakur #SantanuThakurinjured 

Similar News