செய்திகள்
டெல்லியில் தேர்தல் பிரசாரத்தின்போது அரவிந்த் கெஜ்ரிவால் மீது தாக்குதல்
ஆம் ஆத்மி கட்சி தலைவரும் டெல்லி முதல்- மந்திரியுமான அரவிந்த் கெஜ்ரிவால் இன்று தேர்தல் பிரசாரம் செய்தபோது கூட்டத்தில் இருந்த ஒருவர் அவரை தாக்கியதால் பரபரப்பு ஏற்பட்டது. #ArvindKejriwal
புதுடெல்லி:
டெல்லி முதல்- மந்திரியும் ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி மோத்தி நகர் பகுதியில் இன்று மாலை திறந்த வாகனத்தில் சென்று அக்கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவு திரட்டினார்.
அப்போது கூட்டத்தில் இருந்த ஒருவர் ஆவேசமாக தகாத வார்த்தைகளால் திட்டியவாறு ஓடிவந்து வாகனத்தின் மீது ஏறிநின்று, கெஜ்ரிவாலின் கன்னத்தில் பளாரென்று அறைந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த அரவிந்த் கெஜ்ரிவால் சற்று தடுமாறி நிலைகுலைந்தார்.
அதற்குள் வாகனத்தில் இருந்த ஒருவர் கெஜ்ரிவாலை விலக்கிவிட்டு தாக்குதல் நடத்திய நபரை பிடிக்கப் பாய்ந்தார். இதனால், அங்கு சற்று நேரம் பரபரப்பு ஏற்பட்டது. #ArvindKejriwal