செய்திகள்
வாரணாசி தொகுதியில் மோடி தோற்றம் உடையவர் காங்கிரசுக்கு பிரசாரம்
வாரணாசி தொகுதியில் மோடி தோற்றம் உடைய அபிநந்தன் பதக் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார். #Congress #Varanasiconstituency
வாரணாசி:
பிரதமர் மோடி உத்தர பிரதேசம் மாநிலம் வாரணாசி தொகுதியில் போட்டியிடுகிறார். கடந்த 2014-ம் ஆண்டு தேர்தலில் வாரணாசி தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
அப்போது மோடிக்கு ஆதரவாக அவரை போன்று தோற்றம் உடைய அபிநந்தன் பதக் பிரசாரம் செய்தார். இந்த நிலையில் இத்தேர்தலில் வாரணாசியில் அபிநந்தன் பதக் காங்கிரசுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.
அவர் காங்கிரஸ் வேட்பாளர் அஜய்ராயை ஆதரித்து ஓட்டுகேட்டு வருகிறார். பிரசாரத்தின் போது அவர் மோடி போல் பேசினார். நான் அரசாங்கத்தை வழி நடத்துவதில் தோல்வி அடைந்துவிட்டேன். உண்மையை தான் சொல்கிறேன்.
எனவே இத்தொகுதியை அஜய்ராயிடம் ஒப்படைக்கிறேன் என்று அபிநந்தன் பதக் பேசி கிண்டல் அடித்தார். பா.ஜனதாவில் இருந்த அபிநந்தன் பதக் அதன்பின் அக்கட்சியில் இருந்து விலகினார். #Congress #Varanasiconstituency