செய்திகள்

‘பானி’ புயல் - முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க பிரதமர் மோடி உத்தரவு

Published On 2019-04-29 12:36 IST   |   Update On 2019-04-29 12:36:00 IST
பானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். #FaniStorm #PMModi
புதுடெல்லி:

தென்கிழக்கு வங்கக்கடலில் ‘பானி’ புயல் நிலைகொண்டு உள்ளது. இது தீவிர புயலாக இன்று வலுப்பெறக்கூடும்.

இந்த புயல் வட தமிழகம், தெற்கு ஆந்திரா கடற்கரை பகுதியையொட்டி 300 கிலோ மீட்டர் வரை வந்து பின்னர் திசைமாறி வடக்கு மற்றும் வடமேற்கு திசையில் நகரலாம் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.



பானி புயல் தொடர்பாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு பிரதமர் மோடி உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக பிரதமர் மோடி தனது டுவிட்டர் பதிவில் கூறி இருப்பதாவது:-

‘பானி புயல் தொடர்பான நிலவரங்கள் குறித்து அதிகாரிகளிடம் பேசினேன். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள், அனைத்துவிதமான உதவிகள் அளிப்பது தொடர்பாக கேட்டறிந்தேன். பாதிக்கப்படக்கூடிய மாநிலங்களை கண்காணித்து துரித நடவடிக்கைகளை மேற்கொள்ள அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளேன்.

அனைவரது பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வுக்காக பிரார்த்தனை செய்வோம்’

இவ்வாறு பிரதமர் மோடி கூறி உள்ளார். #FaniStorm #PMModi


Tags:    

Similar News