செய்திகள்

ஒடிசா முதல் மந்திரி பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படை சோதனை

Published On 2019-04-17 10:00 GMT   |   Update On 2019-04-17 10:00 GMT
ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
புவனேஷ்வர்:

பாராளுமன்ற தேர்தல் கடந்த 11ம் தேதி முதல் கட்டமாக தொடங்கியது. அடுத்த மாதம் 19ம் தேதியுடன் முடிவடைகிறது. தேர்தலை முன்னிட்டு பணப்பட்டுவாடாவை தடுக்க நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படையினர் அதிரடி சோதனை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஒடிசா முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் தேர்தல் பிரசாரத்துக்கு சென்ற ஹெலிகாப்டரில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்தினர்.



முதல் மந்திரியும், பிஜு ஜனதா தளம் கட்சியின் தலைவருமான நவீன் பட்நாயக் நேற்று ஒடிசா மாநிலம் ரூர்கேலாவில் இருந்து தேர்தல் பிரசாரம் செய்ய ஹெலிகாப்டரில் புறப்பட்டார். அப்போது அங்கு வந்த தேர்தல் பறக்கும் படையினர். நவீன் பட்நாயக்கிடம் இருந்த கைப்பைகள் உள்ளிட்டவற்றை சோதனை செய்தனர். #LokSabhaElections2019 #NaveenPatnaik
Tags:    

Similar News