செய்திகள்

பயங்கரவாதிகளுக்கு பதிலடி கொடுத்ததால் சிலர் தூக்கத்தை இழந்துவிட்டனர் - பிரதமர் மோடி

Published On 2019-04-05 15:44 IST   |   Update On 2019-04-05 15:44:00 IST
உத்தரபிரதேசம் மாநிலம் அம்ரோஹாவில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதிகளுக்கு நாம் பதிலடி கொடுத்ததால் சிலர் தூக்கத்தை இழந்துவிட்டனர் என தெரிவித்துள்ளார். #LokSabhaElections2019 #BJP #PMModi
லக்னோ:

உத்தரபிரதேசம் மாநிலத்தில் உள்ள அம்ரோஹா பகுதியில் பாஜக சார்பில் தேர்தல் பிரசாரம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, காங்கிரஸ் மற்றும் பகுஜன் சமாஜ் - சமாஜ்வாடி கூட்டணியை கடுமையாக விமர்சனம் செய்தார். அப்போது அவர் கூறியதாவது:

காங்கிரஸ், பகுஜன் சமாஜ் மற்றும் சமாஜ்வாடி கட்சிகளின் பயங்கரவாதம் மீதான மென்மையான அணுகுமுறை பயங்கரவாதிகளுக்கு உதவி மட்டும் செய்யவில்லை. மக்களாகிய உங்களின் பாதுகாப்பை சமரசம் செய்துள்ளன.

வாக்கு வங்கி அரசியலுக்காக பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி, சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ் யாதவ் பயங்கரவாத தாக்குதலுக்கு மூளையாக செயல்பட்டவர்களை சுதந்திரமாக செயல்பட விட்டனர். ஆனால் கடந்த 5 ஆண்டுகளாக இங்கு அமைதி நிலைநாட்டப்பட்டு உள்ளது.

இந்தியாவுக்கு எதிராக தாக்குதல்கள் நடத்தினால் மோடி நமக்கு சரியான பாடம் கற்பிப்பார் என்பது பயங்கரவாதிகளுக்கு தெரியும். எங்கு ஒளிந்தாலும் தப்பிக்க முடியாது என்பது பயங்கரவாதிகளுக்கு தெரியும் என குறிப்பிட்டார்.#LokSabhaElections2019 #BJP #PMModi

Similar News