செய்திகள்

10-ம் வகுப்பு தேர்வில் மாணவர்கள் காப்பியடிக்க உதவிய ஆசிரியர்கள் கைது

Published On 2019-03-28 14:06 IST   |   Update On 2019-03-28 14:06:00 IST
கர்நாடக மாநிலம் பெலகாவியில் 10ம் வகுப்பு தேர்வின்போது மாணவர்கள் காப்பியடிக்க உதவிய 4 ஆசிரியர்கள் கைது செய்யப்பட்டனர். #ExamIrregularities
பெலகாவி:

கர்நாடக மாநிலம் பெலகாவி மாவட்டம் அழகனூரில் உள்ள எச்.வி.எச். பள்ளியில், 10-ம்வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றன. இதில், கணித பாட தேர்வின்போது மாணவர்களுக்கு விடைத்தாளை ஆசிரியர்கள் எழுதிக் கொடுத்து காப்பியடிக்க உதவி உள்ளனர்.

ஆசிரியர்களே விடைகள் எழுதுவதை பத்திரிகையாளர் ஒருவர் வீடியோ எடுத்து வெளியிட்டதால் இவ்விவகாரம் வெளிச்சத்துக்கு வந்தது.

இதுகுறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணையில் எச்.வி.எச்.  பள்ளியின் துணை முதல்வர் மகதும், ஆசிரியர்கள் கபாசி, பாட்டீல், பாலையா ஆகியோர் விடைகளை எழுதி மாணவர்களுக்கு வினியோகித்தது தெரியவந்தது. இதையடுத்து 4 ஆசிரியர்களையும் போலீசார் கைது செய்தனர். #ExamIrregularities
Tags:    

Similar News