செய்திகள்

ஹெலிகாப்டர் ஊழல் வழக்கில் ராணுவ தளவாட இடைத்தரகர் கைது

Published On 2019-03-27 03:00 GMT   |   Update On 2019-03-27 03:00 GMT
அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் ராணுவ தளவாட கொள்முதலில் இடைத்தரகராக செயல்பட்ட சூசென் மோகன் குப்தா என்பவரை அமலாக்கத்துறை கைது செய்தது. #AgustaWestland #VVIPChopperScam
புதுடெல்லி:

அகஸ்டாவெஸ்ட்லேண்ட் ஹெலிகாப்டர் ஒப்பந்த ஊழல் வழக்கில் அமலாக்கத்துறை இயக்குனரகம் நேற்று முன்தினம் இரவு சூசென் மோகன் குப்தா என்பவரை கைது செய்தது. இவர் அகஸ்டாவெஸ்ட்லேண்ட் உள்பட ராணுவ தளவாட கொள்முதலில் இடைத்தரகராக செயல்பட்டதாக அமலாக்கத்துறை கூறியுள்ளது. அவர் மீது முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கில் அப்ரூவராக மாறிய ராஜீவ் சக்சேனா கொடுத்த தகவலின் பேரில் இவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விசாரணைக்கு பின்னர் அவர் முறைகேடான பணப்பரிவர்த்தனை வழக்குகளை விசாரிக்கும் தனிக்கோர்ட்டில் ஆஜர்படுத்தப்படுவார் என அதிகாரிகள் தெரிவித்தனர். #AgustaWestland #VVIPChopperScam
Tags:    

Similar News