செய்திகள்

ஜெட் ஏர்வேஸ் ஊழியர்கள் போராட்டம் எதிரொலி- மேலும் 7 விமானங்கள் தரையிறக்கம்

Published On 2019-03-23 06:18 GMT   |   Update On 2019-03-23 06:18 GMT
ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை பெற்று தருமாறு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதன் விளைவாக மேலும் 7 விமானங்கள் தரையிறக்கப்பட்டுள்ளன. #JetAirways
மும்பை:

இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஜெட் ஏர்வேஸில் 23 ஆயிரம் ஊழியர்கள் பணியாற்றி வருகிறார்கள். சில ஆண்டுகளாக ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் நஷ்டத்தில் இயங்கி வருகிறது. நிறுவனம் வாங்கிய கடன்களையும் அடைக்க முடியவில்லை. சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு கடன் உள்ளது. அந்த கடனையும் நிறுவனத்தால் அடைக்க முடியவில்லை.

கடும் நிதி நெருக்கடியால் ஊழியர்களுக்கு பல மாதமாக சம்பளமும் வழங்கவில்லை. மேலும் பல விமானங்களை இயக்க முடியாமல் நிறுத்தப்பட்டு உள்ளன. இதற்கிடையே ஜெட் ஏர்வேஸ் நிறுவன விமானிகள் தங்கள் சம்பள பாக்கியை உடனே வழங்காவிட்டால் வருகிற ஏப்ரல் 1-ந்தேதி முதல் விமானங்களை இயக்காமல் ஸ்டிரைக்கில் ஈடுபடபோவதாக தெரிவித்திருந்தனர்.



இதையடுத்து ஜெட் ஏர்வேஸ் நிறுவனம் டெல்லி- அபுதாபி, தம்மாம், தாக்கா, ஹாங் காங், ரியாத்  ஆகிய நாடுகளுக்கு செல்லும் விமானங்களின் சேவைகளை ஏப்ரல் 30 வரை நிறுத்தி வைத்துள்ளது. மேலும் மும்பை- மான்செஸ்டர் செல்லும் விமானமும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் நேற்று கூடுதலாக 2 ஜெட்லைட் விமானங்கள் உள்ளிட்ட 7 விமானங்களை தரையிறக்கியது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் நிதி தட்டுப்பாடு காரணமாக 600 விமானங்கள் இயக்கப்படும் வழிகளில், தற்போது 119 விமானங்கள் மட்டுமே இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. #JetAirways

Tags:    

Similar News