செய்திகள்

படகில் சென்று வாக்காளர்களை சந்திக்கும் கங்கா யாத்ரா பிரசாரம் - பிரியங்கா தொடங்கினார்

Published On 2019-03-18 13:53 IST   |   Update On 2019-03-18 13:53:00 IST
உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் கங்கையாற்றின் வழியாக படகில் சென்று வாக்காளர்களை சந்திக்கும் கங்கா யாத்ரா பிரசாரத்தை பிரியங்கா காந்தி இன்று தொடங்கினார். #PriyankaGandhi #Gangayatra #LSpolls
லக்னோ:

உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் 7 கட்டங்களாக பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் அம்மாநிலத்தின் கிழக்கு பகுதி காங்கிரஸ் பொதுச்செயலாளரான பிரியங்கா காந்தி, பிரயாக்ராஜ் மற்றும் மிர்சாபூர் மாவட்டங்களில் ‘கங்கா யாத்ரா’ என்ற பெயரில் படகில் சென்று தேர்தல் பிரசாரம் மேற்கொள்கிறார். 3 நாட்கள் நடைபெறும் இந்த யாத்திரையை திரிவேணி சங்கமத்தில் இருந்து அவர் இன்று தொடங்கினார்.



கங்கை நதியில் சுமார் 140 கிலோமீட்டர் தூரத்துக்கு படகில் செல்லும் அவர் நதிக்கரையில் உள்ள கிராம மக்களை சந்தித்து ஆதரவு திரட்டுகிறார். குறிப்பாக, கங்கை நதியை வாழ்வாதாரமாக நம்பி இருக்கும் மீனவ மக்கள் மற்றும் ராஜபுத்திர இன மக்களை அவர் சந்தித்துப்பேச ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

பின்னர், பிரதமர் மோடியின் பாராளுமன்ற தொகுதியான வாரணாசியில் நடைபெறும் மாபெரும் பிரசார பொதுக்கூட்டத்தில் பிரியங்கா உரையாற்றுகிறார்.

இன்று தனது பிரசாரத்தை தொடங்கிய பிரியங்கா காந்தியை திரிவேணி சங்கமம் பகுதியில் உள்ள மானியா காட் என்ற இடத்தில் ஏராளமான பொதுமக்களும் காங்கிரஸ் தொண்டர்களும் வாழ்த்தி வழியனுப்பி வைத்தனர். #PriyankaGandhi #Gangayatra #LSpolls
Tags:    

Similar News