செய்திகள்

எத்தியோப்பியா விமான விபத்து எதிரொலி: போயிங் 737 விமானங்களை இந்தியாவில் இயக்க தடை

Published On 2019-03-12 18:54 GMT   |   Update On 2019-03-13 01:29 GMT
157 உயிர்களை பறித்த எத்தியோப்பியா விமான விபத்தை தொடர்ந்து தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இந்தியாவும் தற்காலிக தடை விதித்துள்ளன. #Boeing737MAX8 #IndiabansBoeing737MAX8
புதுடெல்லி:

எத்தியோப்பியா நாட்டின் தலைநகரான அடிஸ் அபாபா நகரில் இருந்து கென்யா தலைநகர் நைரோபி நோக்கிச் சென்ற எத்தியோப்பியா ஏர்லைன்ஸ் விமானம் சமீபத்தில் விழுந்து நொறுங்கிய விபத்தில் 8 இந்தியர்கள் உள்பட 157 பேர் உயிரிழந்ததையடுத்து, விபத்துக்குள்ளான போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை தரையிறக்கி நிறுத்தி வைக்க சீன அரசு உத்தரவிட்டுள்ளது.

சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட மேலும் சில நாடுகள் இந்த முடிவுக்கு வந்துள்ளன. இந்நிலையில், தங்களது வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க மலேசியா அரசு தடை விதித்துள்ளது.

இதேபோல் பிரிட்டன் அரசும் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லைக்குள் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க நேற்று முதல் தடை விதித்தது.

இந்நிலையில் தங்கள் நாட்டுக்குட்பட்ட வான்எல்லையில் போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானங்களை இயக்க இந்தியாவில் தற்காலிகமாக இயக்க தடைவிதித்துள்ளதாக இந்திய விமான போக்குவரத்து இயக்ககம் செய்தி வெளியிட்டுள்ளது.



சிங்கப்பூர், ஆஸ்திரேலியா உள்ளிட்ட  பல நாடுகள் எடுத்துள்ள இந்த நடவடிக்கையால் பங்கு சந்தையில் போயிங் நிறுவனத்தின் பங்குகள் சரிவை சந்தித்தன. திங்கள் அன்று 4.8% அளவுக்கும், செவ்வாய் அன்று 5 % அளவுக்கும் போயிங் நிறுவன பங்குகள் சரிந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, போயிங் 737 மேக்ஸ்-8 ரக விமானத்தில் உலகில் உள்ள பல நாடுகளின் விமானச்சேவை நிறுவனங்கள் இந்த விமானங்களை வாங்க ஏராளமான அளவில் ஆர்டர் செய்துள்ளது, குறிப்பிடத்தக்கது. #Boeing737MAX8 #EthiopianFlightCrash  #IndiabansBoeing737MAX8
Tags:    

Similar News