செய்திகள்

தாயகம் திரும்பிய அபிநந்தனுடன் ராணுவ மந்திரி சந்திப்பு

Published On 2019-03-02 16:52 IST   |   Update On 2019-03-02 16:52:00 IST
பாகிஸ்தானிடம் சிறைபட்டு நேற்றிரவு இந்தியா திரும்பிய அபிநந்தன் வர்தமானை டெல்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று சந்தித்து நலம் விசாரித்தார். #Abhinandan #NirmalaSitharaman
புதுடெல்லி:

பாகிஸ்தானில் கைது செய்யப்பட்ட இந்திய விமானி அபிநந்தன் நேற்றிரவு வாகா எல்லையில் இந்திய அதிகாரிகளிடம் உரிய முறையில் ஒப்படைக்கப்பட்டார்.

இதற்கிடையே, இன்று காலை விங் கமாண்டர் அபிநந்தன் விமானப்படை தளபதி தனோவாவை சந்தித்து பாகிஸ்தானில் தனக்கு நேர்ந்தது பற்றி விளக்கம் அளித்தார். அதைத்தொடர்ந்து, டெல்லி ராணுவ மருத்துவமனையில் பரிசோதனைக்காக  அனுமதிக்கப்பட்டு உள்ளார்.



இந்நிலையில், இன்று மாலை டெல்லி ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ள அபிநந்தனை பாதுகாப்பு துறை மந்திரி நிர்மலா சீதாராமன் சந்தித்து நலம் விசாரித்தார். #Abhinandan #NirmalaSitharaman

Similar News