செய்திகள்

பிரதமர் பதவி மீது ஆசையா?: நிதின் கட்காரி பதில்

Published On 2019-03-02 07:19 IST   |   Update On 2019-03-02 07:19:00 IST
மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவிக்கும் கருத்துகள் சில நேரங்களில் நரேந்திர மோடியை குறிவைத்து பேசுவதாகவும், அவருக்கு பிரதமர் பதவி மீது ஆசை இருப்பதாகவும் கூறப்படுகிறது. #NitinGadkari #PMModi #BJP
புதுடெல்லி :

மத்திய மந்திரி நிதின் கட்காரி தெரிவிக்கும் கருத்துகள் சில நேரங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி வருகின்றன. இதனால் அவர் நரேந்திர மோடியை குறிவைத்து பேசுவதாகவும், அவருக்கு பிரதமர் பதவி மீது ஆசை இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின. இந்நிலையில் டெல்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் நிதின் கட்காரி பேசியதாவது:-

பிரதமர் பதவிக்கு நான் ஒருபோதும் ஆசைப்பட்டது இல்லை. அதற்கான போட்டியிலும் நான் கிடையாது. அந்த பதவிக்கு தகுதியானவர் நரேந்திர மோடி தான். இது போன்ற கேள்விகள் எப்படி எழுகின்றன என்பது எனக்கு தெரியவில்லை.



வரும் பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும். அப்போது மீண்டும் நரேந்திர மோடி தான் பிரதமராக பதவி ஏற்பார். மோடியின் திறமையான தலைமையில் இந்தியா வளர்ச்சி பாதையில் சென்று கொண்டிருக்கிறது. அவருடைய தலைமையின் கீழ் மந்திரியாக பணிபுரியவே நான் விரும்புகிறேன்.

நான் உண்மையான ஆர்.எஸ்.எஸ். தொண்டன். இதை 10 லட்சம் முஸ்லிம் மக்கள் முன்னிலையிலும் கூறுவதற்கு தயார். அவர்கள் விரும்பினால் எனக்கு ஓட்டு போடலாம்.

இவ்வாறு அவர் பேசினார். #NitinGadkari #PMModi #BJP

Similar News