செய்திகள்

காஷ்மீரில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - 2 விமானிகள் பலி

Published On 2019-02-27 05:56 GMT   |   Update On 2019-02-27 06:24 GMT
ஜம்மு காஷ்மீரின் பத்காம் பகுதியில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. இதில் 2 விமானிகள் உயிரிழந்தனர். #IAFJetCrashes
ஸ்ரீநகர்:

காஷ்மீரில் ஊடுருவியுள்ள பயங்கரவாதிகள் மற்றும் எல்லையில் தாக்குதல் நடத்திவரும் பாகிஸ்தான் ராணுவத்திற்கு எதிராக இந்திய ராணுவம் கடுமையான பதிலடி கொடுத்து வருகிறது. நேற்று அதிகாலை பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதிக்குள் சென்று நடத்தப்பட்ட வான் தாக்குதலில் ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாத இயக்கத்தின் மிகப்பெரிய முகாம் அழிக்கப்பட்டது. ஏராளமான பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.



அதன்பின்னர் பாகிஸ்தான் படைகள் எல்லைப்பகுதியில் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் இந்திய ராணுவம் உஷார்படுத்தப்பட்டு, பாகிஸ்தான் படைகளுக்கு பதிலடி கொடுக்கப்பட்டு வருகிறது. விமானப்படை விமானங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், ஜம்மு காஷ்மீரின் பத்காம் மாவட்டத்தில் பயிற்சியில் ஈடுபட்டிருந்த மிக் ரக போர் விமானம் விபத்துக்குள்ளானது. பத்காம் விமான நிலையத்தில் இருந்து 7 கிமீ தொலைவில் விமானத்தின் பாகங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. தொழில்நுட்ப கோளாறு காரணமாக விமானம் விழுந்து நொறுங்கியிருக்கலாம் என்றும், விமானத்தில் பயணித்த 2 விமானிகள் உயிரிழந்திருப்பதாகவும் தகவல் வெளியாகியிருக்கிறது. #IAFJetCrashes

Tags:    

Similar News