செய்திகள்

ஆம்புலன்சில் கடத்தப்பட்ட ரூ.2.71 கோடி கஞ்சா - ஆந்திராவில் பிடிபட்டது

Published On 2019-02-23 10:06 GMT   |   Update On 2019-02-23 10:06 GMT
ஆந்திர மாநிலத்தில் உயிரை காப்பாற்ற பயன்படும் ஆம்புலன்ஸ் வாகனம் மூலம் கடத்தப்பட்ட 2.71 கோடி ரூபாய் மதிப்பிலான கஞ்சா பாக்கெட்டுகளை விசாகப்பட்டினத்தில் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். #DRIseize #DRIraid #cannabisseized #cannabisinambulance #VisakhapatnamDRIseize
ஐதராபாத்:

உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகள் மற்றும் விபத்துகளில் சிக்கி உயிருக்கு போராடுபவர்களை காப்பாற்ற நாடு முழுவதும் அரசு மற்றும் தனியாருக்கு சொந்தமாக ஆயிரக்கணக்கான ஆம்புலன்ஸ் வாகனங்கள் இயங்கி வருகின்றன.

இந்நிலையில் ஆந்திர மாநிலம், விசாகப்பட்டினம் மாவட்டத்தின் வழியாக சிலர் பெரிய அளவிலான கஞ்சா கடத்தலில் சிலர் ஈடுபடுவதாக வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் வந்தது.

இதையடுத்து, அம்மாவட்டம் முழுவதும் சாலைகளில் தடுப்புகளை ஏற்படுத்தி போலீசார் துணையுடன் வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தீவிரமாக வாகன பரிசோதனையில் ஈடுபட்டனர்.



அப்போதும் அவ்வழியாக வந்த ஒரு ஆம்புலன்ஸ் வாகனத்தை மடக்கி பரிசோதனை செய்தபோது 1,813 கிலோ அளவிலான கஞ்சா பாக்கெட்டுகள் உள்ளே மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக ஆம்புலன்ஸ் டிரைவர் மற்றும் உடனிருந்தவர்களை கைது செய்த போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த வாகனத்தில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட கஞ்சாவின் உள்நாட்டு மதிப்பு சுமார் 2 கோடியே 70 லட்சம் ரூபாய் என வருவாய் புலனாய்வு துறை அதிகாரிகள் தெரிவித்தனர். #DRIseize #DRIraid #cannabisseized   #cannabisinambulance in #VisakhapatnamDRIseize
Tags:    

Similar News