செய்திகள்

ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் பத்திரமாக மீட்பு

Published On 2019-02-21 04:13 GMT   |   Update On 2019-02-21 04:13 GMT
மகாராஷ்டிர மாநிலம் புனே மாவட்டத்தில் 200 அடி ஆழம் கொண்ட ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்த 6 வயது சிறுவன் தீவிர முயற்சிக்குப் பிறகு உயிருடன் மீட்கப்பட்டான். #BoyTrappedBorewell #BoyRescued
புனே:

மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் தோரண்டல் கிராமத்தில் நேற்று மாலை விளையாடிக் கொண்டிருந்த 6 வயது சிறுவன் ரவி, அங்கு மூடப்படாமல் இருந்த ஆழ்துளை கிணற்றில் தவறி விழுந்துவிட்டான். சிறுவனைக் காணாமல் தேடிய பெற்றோர், அவன் விளையாடிய இடத்தில் தேடியபோது, அவன் ஆழ்குழாய் கிணற்றில் விழுந்திருப்பதை அறிந்தனர். இதையடுத்து போலீசுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர். சுமார் 12 அடி ஆழத்தில் சிறுவன் சிக்கியிருந்ததால் கயிறு மூலம் மீட்கும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால், சிறுவனின் உடலில் பலத்த காயங்கள் ஏற்படும் வாய்ப்பு இருந்ததால் அந்த முயற்சி கைவிடப்பட்டது. எனவே, தேசிய பேரிடர் மீட்பு படைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.



அவர்கள் வருவதற்குள், உள்ளூர் மக்கள் சேர்ந்து அந்த ஆழ்குழாய் கிணற்றின் பக்கவாட்டில் பள்ளம் தோண்டத் தொடங்கினர். பேரிடர் மீட்புக்குழுவினர் வந்து, பக்கவாட்டில் தோண்டப்பட்ட பள்ளத்தை மேலும் ஆழப்படுத்தி,  சிறுவன் சிக்கியிருந்த இடத்திற்கு அருகில் துளையிட்டு பத்திரமாக மீட்டனர். சுமார் 16 மணி நேரத்திற்குப் பிறகு சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டதால் பெற்றோர் நிம்மதி அடைந்தனர். #BoyTrappedBorewell #BoyRescued
Tags:    

Similar News