செய்திகள்

புல்வாமா தாக்குதலில் பலியான 23 வீரர்களின் வங்கிக்கடனை தள்ளுபடி செய்கிறது எஸ்பிஐ

Published On 2019-02-19 08:02 GMT   |   Update On 2019-02-19 08:02 GMT
புல்வாமா தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த வீரர்களில் 23 பேரின் கடன்களை தள்ளுபடி செய்ய உள்ளதாக எஸ்பிஐ வங்கி அறிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI
புதுடெல்லி:

ஜம்மு காஷ்மீர் மாநிலம், புல்வாமா மாவட்டத்தில் சிஆர்பிஎப் வீரர்கள் சென்ற பேருந்து மீது ஜெய்ஷ் இ முகமது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படைத் தாக்குதலில், 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலில் பலியான வீரர்களின் குடும்பத்தினருக்கு மத்திய மாநில அரசுகள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் உதவிகள் செய்து வருகின்றனர். அவ்வகையில் நாட்டின் மிகப்பெரிய  அரசு வங்கியான ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியா (எஸ்பிஐ) வீரர்களின் வங்கிக் கடன்களை தள்ளுபடி செய்வதாக அறிவித்துள்ளது.

புல்வாமா தாக்குதலில் பலியான 40 வீரர்களில் 23 வீரர்கள் எஸ்.பி.ஐ. வங்கியில் கடன் பெற்றிருந்தனர். அவர்கள் பெற்றிருந்த கடன் அனைத்தையும் உடனடியாக தள்ளுபடி செய்வதாகவும், அவர்களுக்கு காப்பீட்டுத் தொகையாக வீரர்கள் ஒவ்வொருவரின் குடும்பத்தினருக்கும் ரூ.30 லட்சம் வழங்க இருப்பதாகவும் கூறி உள்ளது.

மேலும், எஸ்பிஐ வாயிலாக சிஆர்பிஎப் வீரர்களுக்கு உதவி செய்ய விரும்புவோர், bharatkeveer.gov.in என்ற இணையதளத்தில் நிதியை நேரடியாக வழங்கலாம் எனவும் தெரிவித்துள்ளது. #PulwamaVictims #CRPFSoldiers #SBI
Tags:    

Similar News