செய்திகள்

சிகரெட் பிடிக்கும் கர்ப்பிணிகளுக்கு எச்சரிக்கை- பிளவுபட்ட உதட்டுடன் குழந்தை பிறக்கும்

Published On 2019-02-11 09:12 GMT   |   Update On 2019-02-11 09:12 GMT
கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
புதுடெல்லி:

ஆசிய மக்கள் தொகையில் பிறக்கும் 1000 குழந்தைகளில் 1.7 சதவீதம் குழந்தைகள் பிளவுபட்ட உதட்டுடன் பிறக்கின்றன. இந்தியாவை பொறுத்தவரை இதுகுறித்து குறிப்பிட்ட புள்ளிவிவரம் கிடைக்கவில்லை. ஆனால் ஆண்டுதோறும் 35 ஆயிரம் குழந்தைகள் பிளவுபட்ட உதடு மற்றும் உள்வாயின் மேற்புறம் அண்ணம் பாதிக்கப்பட்ட நிலையில் பிறப்பதாக உத்தேசமாக கணக்கிடப்பட்டுள்ளது.

இதற்கான ஆய்வு குறித்து ‘எய்ம்ஸ்’ மருத்துவ நிறுவனத்தின் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். கடந்த 2010-ம் ஆண்டு முதல் 3 கட்டமாக இந்த ஆராய்ச்சி நடத்தப்பட்டது.

அதில் பெண்களுக்கு கர்ப்ப கால தொடக்கத்தில் சிகரெட் பிடித்தல், மது அருந்துதல், போதை மருந்து உட்கொள்ளுதல், மற்றவர் பிடிக்கும் சிகரெட் புகையை சுவாசித்தல் உள்ளிட்ட காரணங்களால் வயிற்றில் வளரும் சிசுவின் வளர்ச்சி பாதிக்கிறது. அதன்மூலம் உதடு பிளவுபட்ட மற்றும் வாயின் உள்புறத்தில் அண்ணம் சரிவர வளர்ச்சி இல்லாமை போன்ற குறைகள் ஏற்படுகின்றன.

இதனால் குழந்தைகள் சரிவர உணவு சாப்பிட முடியாது, சுவாசிக்கவும் மிகவும் சிரமப்படுவர். அதன் காரணமாக பல நோய்கள் ஏற்படும் என டாக்டர்கள் தெரிவித்துள்ளனர்.

எனவே கர்ப்பிணி பெண்கள் சிகரெட் பிடித்தாலும், மது அருந்தினாலும், போதை மருந்து உட்கொண்டாலும் அது பிறக்கும் குழந்தையை கடுமையாக பாதிக்கும் என டாக்டர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
Tags:    

Similar News