செய்திகள்

உ.பி. சட்டசபையில் பேப்பர் பந்துகளை வீசிய எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள்

Published On 2019-02-05 08:19 GMT   |   Update On 2019-02-05 08:19 GMT
உத்தர பிரதேச சட்டசபையில் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பியதுடன், பேப்பர் பந்துகளையும் வீசியது பரபரப்பை ஏற்படுத்தியது. #UPBudgetSession #UPAssembly
லக்னோ:

பாஜக ஆளும் உத்தர பிரதேச மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத் தொடர் இன்று தொடங்கியது. ஆண்டின் முதல் கூட்டம் என்பதால், சட்டசபை மற்றும் சட்ட மேலவை ஆகிய இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் கவர்னர் ராம் நாயக் உரையாற்றினார். கவர்னர் உரையாற்றத் தொடங்கிய சிறிது நேரத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் (சமாஜ்வாடி, பகுஜன் சமாஜ் கட்சி எம்எல்ஏக்கள்) அரசுக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பத் தொடங்கினர். கவர்னர் உரைக்கு எதிர்ப்பு தெரிவித்த அவர்கள், ‘கவர்னர் கோ பேக்’ என்றும் முழக்கமிட்டனர்.

ஒருகட்டத்தில், சபையின் மையப்பகுதியை நோக்கி பேப்பர் பந்துகளை வீசி எறிந்தனர். அவற்றை சபை ஊழியர்கள் அப்புறப்படுத்தினர்.



இந்த அமளிக்கு இடையிலும் கவர்னர் ராம் நாயக் தனது உரையை தொடர்ந்தார். அவர் தனது உரையில், அரசின் பல்வேறு வளர்ச்சித் திட்டங்கள், அரசின் சாதனைகளை பட்டியலிட்டார்.

வரும் 7-ம் தேதி நிதி மந்திரி ராஜேஷ் அகர்வால், பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். பிப்ரவரி 22-ம் தேதி வரை பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. #UPBudgetSession #UPAssembly
Tags:    

Similar News