செய்திகள்

எதிர்க்கட்சிகள் மாநாடு மம்தா பானர்ஜிக்கு சத்ருகன் சின்கா பாராட்டு

Published On 2019-01-21 00:08 IST   |   Update On 2019-01-21 00:08:00 IST
எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து ஜனநாயகத்தை மீட்டெடுத்ததாக மம்தா பானர்ஜிக்கு பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சத்ருகன் சின்கா எம்.பி. புகழாரம் சூட்டியுள்ளார். #ShatrughanSinha #MamataBanerjee #Democracy
பாட்னா:

மேற்கு வங்க முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, பா.ஜனதா கட்சிக்கு எதிராக பல்வேறு எதிர்க்கட்சிகளை ஒன்றிணைக்கும் வகையில் நேற்று முன்தினம் கொல்கத்தாவில் பிரமாண்ட மாநாட்டை நடத்தினார். இதில் பா.ஜனதா கட்சியைச் சேர்ந்த சத்ருகன் சின்கா எம்.பி. கலந்து கொண்டார்.



இந்த நிலையில், அவர் நேற்று தனது டுவிட்டர் பக்கத்தில், எதிர்க்கட்சிகளை ஒன்று சேர்த்து ஜனநாயகத்தை மீட்டெடுத்ததாக மம்தா பானர்ஜிக்கு புகழாரம் சூட்டியுள்ளார்.

இந்நிலையில் எதிர்க்கட்சிகள் மாநாட்டில் கலந்து கொண்ட சத்ருகன் சின்கா மீது நடவடிக்கை எடுக்கப்படுமா? என்று பா.ஜனதா தேசிய செய்தித்தொடர்பாளர் பிரதாப் ரூடியிடம் கேள்வி எழுப்பப்பட்டது, அதற்கு பதிலளித்த அவர், இதுபற்றி கவனத்தில் கொள்ளப்படும்’ என்று தெரிவித்தார்.   #ShatrughanSinha #MamataBanerjee #Democracy 
Tags:    

Similar News