செய்திகள்

24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடி டெபாசிட் செய்ய வேண்டும் - தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவு

Published On 2019-01-17 22:20 GMT   |   Update On 2019-01-17 22:20 GMT
24 மணி நேரத்துக்குள் கார் நிறுவனம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டது. #NGT #Volkswagen #Deposit
புதுடெல்லி:

ஜெர்மனியை சேர்ந்த போக்ஸ்வேகன் மோட்டார் வாகன நிறுவனம் இந்தியாவில் தனது டீசல் கார்களில் மோசடியான கருவியை பயன்படுத்தியதன் மூலம் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவித்ததாக புகார் எழுந்தது. இதனை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம் ரூ.100 கோடியை இடைக்கால தொகையாக மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்துக்கு டெபாசிட் செய்ய வேண்டும் என்று அந்நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.



இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்த தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தலைவர் ஆதர்ஷ்குமார் கோயல் தலைமையிலான அமர்வு, தனது உத்தரவை அமல்படுத்தாத அந்த நிறுவனத்துக்கு கண்டனம் தெரிவித்தது. அதோடு, ரூ.100 கோடியை 24 மணி நேரத்துக்குள் அதாவது இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 5 மணிக்குள் டெபாசிட் செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டது.  #NGT #Volkswagen #Deposit 
Tags:    

Similar News