செய்திகள்

நில அபகரிப்பு முயற்சி - வங்காளதேசத்தில் சிவன் கோவில் மீது தாக்குதல்

Published On 2019-01-06 11:19 GMT   |   Update On 2019-01-06 11:19 GMT
வங்காளதேசம் நாட்டில் நிலம் அபகரிக்கும் முயற்சியில் சிவன் கோவில் மீது தாக்குதல் நடத்தப்பட்ட சம்பம் தொடர்பாக போலீசார் விசாரித்து வருகின்றனர். #Hindutemple
டாக்கா:

வங்காளதேசம் நாட்டின் மத்திய பகுதியில் உள்ள டங்கைல் மாவட்டத்திற்குட்பட்ட கோக்காடிர் என்னும் கிராமத்தில் வசித்து வருபவர் சிட்டா ரஞ்சன். தனக்கு சொந்தமான இடத்தில் சுமார் 20 ஆண்டுகளுக்கு முன்னர் சிவன் கோவில் ஒன்றை கட்டிய இவர், காப்பாளராக இருந்து நிர்வகித்து வருகிறார். 

அப்பகுதியில் இருப்பவர்களும் அருகாமையில் வாழும் இந்து மக்களும் இந்த கோவிலில் வழிபாடு செய்து வந்தனர்.

இந்நிலையில், நேற்று (சனிக்கிழமை ) சுமார் பத்துபேர் கும்பலாக வந்து இந்த சிவன் கோவில் மீது தாக்குதல் நடத்தினர். அந்த கிராமத்தை சேர்ந்த முக்கிய பிரமுகர் தலைமையில் நடத்தப்பட்ட இந்த தாக்குதல் தொடர்பாக நாகர்பூர் காவல் நிலையத்தில் சிட்டா ரஞ்சன் புகார் அளித்துள்ளார்.

கோவில் அமைந்துள்ள இடத்தை அபகரிக்க முன்னர் சிலமுறை முயற்சித்த அந்த முக்கிய பிரமுகர் தற்போது கோவிலை இடித்து விட்டு நிலத்த அபகரிக்க முயன்றதாக தனது புகாரில் சிட்டா ரஞ்சன் குறிப்பிட்டுள்ளார்.

தாக்குதலில் சேதமடைந்த கோவிலை பார்வையிட்ட போலீசார் இது தொடர்பாக இன்னும் யாரையும் கைது செய்யவில்லை.  #Hindutemple  
Tags:    

Similar News