செய்திகள்

பல் துலக்கும் போது பிரஷ்சை விழுங்கிய நபர் - எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர்

Published On 2019-01-04 00:51 IST   |   Update On 2019-01-04 00:51:00 IST
பல் துலக்கும் போது பிரஷ்சை விழுங்கிய நபருக்கு எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை இன்றி எய்ம்ஸ் டாக்டர்கள் வெற்றிகரமாக வெளியே எடுத்தனர். #ToothBrush #CleaningThroat
புதுடெல்லி:

டெல்லியின் சீமாபுரியை சேர்ந்தவர் அவிட் (வயது 36). இவர் பல் துலக்கும் போது பிரஷ் மூலம் தொண்டையையும் சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக அந்த பிரஷ்சை விழுங்கி விட்டார்.

இதனால் வயிற்று வலியால் துடித்த அவர் அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு சென்றார். பின்னர் மேல் சிகிச்சைக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு சி.டி. ஸ்கேன் எடுக்கப்பட்டது. அப்போது அவரது வயிற்றின் மேல் பகுதியில் பிரஷ் சிக்கியிருப்பது தெரியவந்தது.

இதைத்தொடர்ந்து எண்டோஸ்கோபி சிகிச்சை மூலம் அறுவை சிகிச்சை இன்றி அந்த பிரஷ் வெளியே எடுக்கப்பட்டது. டாக்டர்கள் விஷேச கண்ணி ஒன்றை பயன்படுத்தி லாவகமாக அந்த பிரஷ்சை வெளியே எடுத்தனர். வயிற்றுப்பகுதியில் சிக்கிக்கொண்ட பிரஷ்சை வெற்றிகரமாக வெளியே எடுத்த டாக்டர்களை அவிட்டின் குடும்பத்தினர் பாராட்டினர்.  #ToothBrush #CleaningThroat 
Tags:    

Similar News