செய்திகள்

சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது - ராம்விலாஸ் பஸ்வான் கருத்து

Published On 2018-12-13 20:35 GMT   |   Update On 2018-12-13 20:35 GMT
சட்டசபை தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது என மத்திய மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார். #AssemblyPoll #LokSabhaPoll #RamVilasPaswan
புதுடெல்லி:

மத்திய பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட 5 மாநில சட்டசபைக்கு நடத்தப்பட்ட தேர்தலில் பா.ஜனதாவுக்கு பெருத்த பின்னடைவு ஏற்பட்டது. அங்கு 3 மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி ஆட்சியை பிடித்துள்ளது. இதற்கு அந்தந்த மாநிலங்களில் இருந்த ஆளுங்கட்சி மீது மக்களுக்கு இருந்த எதிர்ப்பே காரணம் என பா.ஜனதாவின் கூட்டணி கட்சிகளில் ஒன்றான லோக் ஜனசக்தி தலைவரும், மத்திய மந்திரியுமான ராம்விலாஸ் பஸ்வான் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், ‘இந்த மாநிலங்களில் ஆளுங்கட்சி மீது மக்களுக்கு கோபம் இருந்த போதும், மத்திய பிரதேசம், ராஜஸ்தான் மாநிலங்களில் காங்கிரஸ் பெற்றுள்ள வாக்கு சதவீதத்துக்கு சமமாக பா.ஜனதாவும் ஏறக்குறைய பெற்று இருக்கிறது. இந்த தேர்தல் முடிவுகள் நாடாளுமன்ற தேர்தலில் எந்த தாக்கத்தையும் ஏற்படுத்தாது’ என்று குறிப்பிட்டார்.

2019-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி பிரதமர் மோடி தலைமையில் மீண்டும் ஆட்சியை பிடிக்கும் என்று கூறிய பஸ்வான், ஜனநாயகத்தில் மக்களின் தீர்ப்பு எப்போதும் வரவேற்கப்படும் என்றும் தெரிவித்தார்.  #AssemblyPoll #LokSabhaPoll #RamVilasPaswan
Tags:    

Similar News