செய்திகள்

அஸ்தி கரைத்து திரும்பியபோது ஆற்றில் படகு கவிழ்ந்தது- 6 பேரின் உடல்கள் மீட்பு

Published On 2018-12-11 15:31 IST   |   Update On 2018-12-11 15:31:00 IST
உத்தர பிரதேசத்தில் யமுனை நதியில் படகு கவிழ்ந்து மூழ்கியதால், பலியான 6 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன. #BoatCapsizes
பிரயாக்ராஜ்:

மகாராஷ்டிராவைச் சேர்ந்த சிலர் உத்தர பிரதேச மாநிலம் பிரயாக்ராஜ் நகரில் உள்ள திரிவேணி சங்கமத்தில், அஸ்தியை கரைப்பதற்காக வந்திருந்தனர். அஸ்தி கரைப்பு மற்றும் சடங்குகள் செய்தபிறகு படகு மூலம் கரை திரும்பினர். கீத்கஞ்ச் பகுதியில் மங்காமேஷ்வர் ஆலயம் அருகே வந்தபோது, படகினுள் திடீரென தண்ணீர் புகுந்தது. இதனால் பாரம் தாங்காமல் யமுனை நதியில் படகு கவிழ்ந்தது.

படகில் பயணம் செய்த 16 பேரும் தண்ணீரில் மூழ்கி தத்தளித்தனர். அவர்களில் 6 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். படகோட்டி உள்ளிட்ட 2 பேர்  நீந்தி கரை சேர்ந்தனர். 6 பேர் சடலமாக மீட்கப்பட்டனர். 2 பேரை தேடும் பணி தொடர்ந்து நடைபெறுகிறது.

இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து படகோட்டியை தேடி வருகின்றனர். கீத்கஞ்ச் பகுதியைச் சேர்ந்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். #BoatCapsizes 
Tags:    

Similar News