செய்திகள்

தாஜ் மஹால் நுழைவுக் கட்டணம் உயர்வு- கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 செலுத்த வேண்டும்

Published On 2018-12-10 09:30 GMT   |   Update On 2018-12-10 09:30 GMT
உத்தர பிரதேசத்தில் உள்ள தாஜ் மஹாலில் கல்லறை பகுதிக்கு செல்ல கூடுதலாக ரூ.200 கட்டணம் செலுத்த வேண்டும். #TajMahal
ஆக்ரா:

உத்தர பிரதேசத்தின் ஆக்ரா நகரில் 17ம் நூற்றாண்டை சேர்ந்த தாஜ் மஹால் நினைவு சின்னம் அமைந்துள்ளது.  முகலாயர்களின் கட்டிட கலைக்கு சிறந்த சான்றாக உள்ள இங்கு பொதுமக்கள் சென்று பார்வையிட ரூ.50 கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது.

இந்த நிலையில், தாஜ் மஹாலின் முக்கிய பகுதியான  கல்லறை பகுதிக்கு செல்வதற்கு கூடுதலாக ரூ.200 கட்டணம் வசூலிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது. இந்த புதிய கட்டண வசூல் முறையால் முக்கிய பகுதியில் மக்கள் கூட்டம் சேருவது குறையும்.



இந்த கட்டண அறிவிப்பின்படி, உள்ளூர் பார்வையாளர்கள் ரூ.250 மற்றும் வெளிநாட்டு பார்வையாளர்கள் ரூ.1,300 செலுத்த வேண்டும். இதேபோன்று சார்க் நாடுகளில் இருந்து வருவோர் ரூ.540க்கு பதிலாக ரூ.740 கட்டணம் செலுத்திட வேண்டும்.

ரூ.50க்கான டிக்கெட் வைத்திருப்போர் கல்லறை பகுதிக்குள் நுழைய முடியாது. ஆனால் அவர்கள் தாஜ் மஹாலை சுற்றி வந்து பின்பகுதியை காண முடியும்.  பின்புறம் உள்ள யமுனை நதியின் கரையையும் அவர்கள் காண முடியும்.

கடந்த 1983ம் ஆண்டு யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய தலம் என தாஜ் மஹால் அறிவிக்கப்பட்டது.  இந்தியாவில் முஸ்லிம் கலைக்கான அணிகலன் மற்றும் உலக பாரம்பரிய தலத்தில் உலகளவில் ஈர்த்த சிறந்த படைப்புகளில் ஒன்றாக உள்ளது என சான்று வழங்கப்பட்டு உள்ளது. #TajMahal
Tags:    

Similar News