செய்திகள்

3 உயிர்களை பலிவாங்கிய பஞ்சாப் குண்டுவெடிப்பு சம்பவத்தில் முக்கிய குற்றவாளி கைது

Published On 2018-11-21 11:46 GMT   |   Update On 2018-11-21 16:04 GMT
பஞ்சாப் மாநிலத்தில் மத விழாவின்போது 3 பேர் கொல்லப்பட்ட குண்டுவெடிப்பு தாக்குதலில் முக்கிய குற்றவாளியை போலீசார் இன்று கைது செய்தனர். #NirankariBhawan #Amritsarblast #BikramjitSingh #CaptainAmarinderSingh
சண்டிகர்:

பஞ்சாப் மாநிலம், அமிர்தரஸ்க்கு உட்பட்ட ராஜாசான்சி கிராமத்தில் உள்ள நிரன்காரி பவன் கட்டிடத்தில் இன்று மத விழா ஒன்று நடைபெற்று கொண்டிருந்தது. இதில் ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது அவ்வழியாக மோட்டார் சைக்கிளில் சென்ற மர்மநபர்கள் அந்த கட்டிடத்தின் மீது கையெறி குண்டுகளை வீசிவிட்டு தப்பியோடினர். இந்த தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். சுமார் 10 பேர் காயமடைந்தனர்.

இந்த தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட குண்டுகள் பாகிஸ்தான் ராணுவத்தினர் காஷ்மீர் எல்லையில் வீசுக் குண்டுகளை ஒத்திருப்பதாக உளவுத்துறையினர் கண்டுபிடித்தனர்.


இந்நிலையில், இந்த சம்பவம் தொடர்பாக தேடப்பட்ட குற்றவாளிகளில் ஒருவனான பிக்ரம்ஜித் சிங் என்பவரை போலீசார் கைது செய்துள்ளனர் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்து கொள்கிறேன் என பஞ்சாப் மாநில முதல் மந்திரி கேப்டன் அமரிந்தர் சிங் இன்று அறிவித்துள்ளார். தலைமறைவாக இருக்கும் மற்றொரு குற்றவாளியான அவ்தார் சிங் என்பவனும் விரைவில் கைதாவான் எனவும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். #NirankariBhawan #Amritsarblast #Bikramjit Singh #CaptainAmarinderSingh
Tags:    

Similar News