செய்திகள்

இந்திய விமானப்படை தளபதி வீட்டில் பணியாளர் தூக்கிட்டு தற்கொலை

Published On 2018-11-09 18:18 IST   |   Update On 2018-11-09 18:18:00 IST
டெல்லியில் உள்ள இந்திய விமானப்படை தளபதியின் வீட்டில் பணியாளர் ஒருபர் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Domestichelp #IAFchief
புதுடெல்லி:

இந்திய விமானப்படை தளபதியாக பதவி வகிப்பவர் பிரேந்திர சிங் தனோவா. இவரது வீடு டெல்லி லுட்யென்ஸ் பகுதியில் உள்ளது.

பிரேந்திர சிங் தனோவா வீட்டில் எடுபிடி வேலைகளை செய்து வந்த மனோஜ் குமார் (38) என்பவர் பணியாளர்களுக்கான குடியிருப்பில் தனது அறைக்குள் நேற்று பிணமாக தொங்கினார்.

தகவல் அறிந்து விரைந்துவந்த போலீசார் பிரேதத்தை கைப்பற்றி, வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். #Domestichelp  #IAFchief 
Tags:    

Similar News