செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் மனநிலை பாதித்த நபரை சுட்டுக் கொன்ற ராணுவ வீரர்

Published On 2018-11-03 09:44 GMT   |   Update On 2018-11-03 09:44 GMT
ஜம்மு காஷ்மீரில் ராணுவ முகாமிற்குள் நுழைய முயன்ற மனநிலை பாதிக்கப்பட்ட நபரை, காவல் பணியில் ஈடுபட்ட வீரர் சுட்டுக் கொன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. #JKArmyFired #ArmyCamp
ஸ்ரீநகர்:

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஷோபியான் மாவட்டம் பஹ்னூ கிராமத்தில் உள்ள ராணுவ முகாமை நோக்கி இன்று அதிகாலை ஒரு நபர் வந்துள்ளார். முகாமின் சுற்றுப்புற வேலியை கடந்து வந்தபோது முகாமில் காவல் பணியில் ஈடுபட்டிருந்த வீரர், திரும்பி போகும்படி எச்சரிக்கை விடுத்துள்ளார். வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டு எச்சரித்துள்ளார். ஆனாலும் அந்த நபர் எதையும் காதில் வாங்கிக்கொள்ளாமல் முகாமின் காம்பவுண்டு சுவர் நோக்கி அந்த நபர் நடந்து வந்துள்ளார்.

இதனால் சந்தேகமடைந்த ராணுவ வீரர், அந்த நபரை நோக்கி துப்பாக்கியால் சுட்டுள்ளார். இதில் அந்த நபர் சம்பவ இடத்திலேயே சுருண்டு விழுந்து இறந்துவிட்டார்.  விசாரணையில் அவர் அதே பகுதியைச் சேர்ந்த ரயீஸ் அகமது வானி என்பதும், அவர்  மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதும் தெரியவந்தது.

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். சந்தர்ப்ப சூழ்நிலை காரணமாக வானியின் உயிர் பறிபோனதாக ராணுவம் தரப்பில் கூறப்படுகிறது.

வானியின் மரணத்திற்கு காரணமான பாதுகாப்பு படை வீரர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி வானியின் குடும்பத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். #JKArmyFired #ArmyCamp
Tags:    

Similar News