செய்திகள்

பாரத ஸ்டேட் வங்கி ஏடிஎம்களில் இனி ஒரு நாளைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்க முடியும்

Published On 2018-10-30 16:41 GMT   |   Update On 2018-10-30 16:41 GMT
பாரத ஸ்டேட் வங்கி வாடிக்கையாளர்கள் ஏடிஎம் மூலம், 20 ஆயிரம் ரூபாய் வரை மட்டுமே எடுக்கும் புதிய நடைமுறை, (நாளை 31-ம் தேதி) முதல் அமலுக்கு வருகிறது. #SBI #SBIDebitCards #ATM
புதுடெல்லி:

பாரத ஸ்டேட் வங்கியின் வாடிக்கையாளர்கள் தங்களது வங்கிக்கணக்கில் இருந்து ஒரு நாளைக்கு ஏ.டி.எம். மெஷின்களில் பணம் எடுக்கும் உச்சவரம்பு நாற்பதாயிரம் ரூபாயாக இருந்தது. இந்த உச்சவரம்பை இருபதாயிரம் ரூபாயாகக் குறைக்கப்போவதாக கடந்த மாதம் அறிவிப்பு வெளியிட்டது.

அதன்படி, கிளாசிக், மேஸ்ட்ரோ வகை ஏ.டி.எம். அட்டைகளுக்கான தினசரி பணம் எடுப்பதற்கான உச்சவரம்பு 40,000 ரூபாயிலிருந்து 20,000 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது.  இந்த உத்தரவு (நாளை முதல்) 31-ம் தேதி முதல் நடைமுறைக்கு வருகிறது. மின்னணுப் பரிமாற்றம், பணமில்லா வணிக நடவடிக்கை, ஏடிஎம்களில் நடைபெறும் மோசடி பணபரிவர்த்தனையை தடுக்கும் பொருட்டும், டிஜிட்டல், பணமில்லா பரிவர்த்தனையை ஊக்குவிக்கும் பொருட்டும் பாரத ஸ்டேட் வங்கி இந்த நடவடிக்கையை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக  பாரத ஸ்டேட் வங்கி விளக்கம் அளித்துள்ளது.



பாரத ஸ்டேட் வங்கி மீது ஏற்கனவே வாடிக்கையாளர்கள் பல வகையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.  இந்நிலையில் பாரத ஸ்டேட் வங்கியின் புதிய அறிவிப்பு வாடிக்கையாளர்களை மேலும் அதிருப்தி அடைய வைத்துள்ளது. #SBI #SBIDebitCards #ATM 
Tags:    

Similar News