செய்திகள்
திருப்பதியில் சாமி தரிசனத்திற்காக வரிசையில் காத்திருந்த பக்தர்கள் கூட்டம்.

திருப்பதியில் 20 மணி நேரம் காத்திருந்து பக்தர்கள் தரிசனம்

Published On 2018-10-21 08:02 GMT   |   Update On 2018-10-21 08:02 GMT
சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகரித்துள்ளதால் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது. #Tirupatitemple
திருமலை:

சரஸ்வதி பூஜை, விஜயதசமி மற்றும் சனி, ஞாயிற்றுக்கிழமை வார விடுமுறையையொட்டி திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது.

நேற்று காலையில் இருந்து மாலை வரை 98,230 பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். ரூ.1 கோடியே 66 லட்சம் உண்டியல் காணிக்கை வசூலாகியுள்ளது. 52 ஆயிரம் பேர் முடி காணிக்கை செலுத்தினர்.

இன்று காலையிலும் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அதிகளவில் இருந்தது.

வைகுண்டம் கியூ காம்ப்ளக்சில் உள்ள 31 கம்பார்ட்மெண்டுகளில் பக்தர்கள் நிரம்பி, நாராயணகிரி பூங்கா வரை 3 கிலோ மீட்டர் தூரத்துக்கு தரிசன வரிசையில் காத்திருந்தனர். அவர்கள் சாமி தரிசனம் செய்ய 20 மணி நேரமாகிறது.

தரிசன வரிசையில் சென்ற பக்தர்களுக்கு ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் உணவு, குடிநீர் ஆகியவற்றை வழங்கினர். திருமலையில் உள்ள பல இடங்களிலும் உணவுப் பொட்டலங்களை ஸ்ரீவாரிசேவா சங்க தொண்டர்கள் வழங்கி வருகிறார்கள்.  #Tirupatitemple
 


Tags:    

Similar News