செய்திகள்

ரெயில் விபத்தில் காயமடைந்தவர்களை நேரில் சந்தித்து பஞ்சாப் முதல்வர் ஆறுதல்

Published On 2018-10-20 08:32 GMT   |   Update On 2018-10-20 08:32 GMT
பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகரின் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெறுபவர்களை முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார். #AmritsarTrainAccident #CaptainAmarinderSingh
அமிர்தசரஸ்:

பஞ்சாப் மாநிலத்தின் அமிர்தசரஸ் நகர் அருகே நிகழ்ந்த ரெயில் விபத்தில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 61 ஆக உயர்ந்துள்ள நிலையில் இவ்விபத்தில் காயமடைந்து மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருபவர்களை அம்மாநில முதல் மந்திரி அமரிந்தர் சிங் இன்று சந்தித்து ஆறுதல் கூறினார்.

அமன்தீப் மற்றும் குருநானக் மருத்துவமனைக்கு சென்று காயமடைந்தவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் பற்றி கேட்டறிந்த அமரிந்தர் சிங், விபத்து நிகழ்ந்த ரெயில்வே கேட் பகுதியையும் பார்வையிட்டார்.



இந்த விபத்து பற்றி விசாரிக்க உயர்மட்ட மாவட்ட மாஜிஸ்திரேட் மற்றும் போலீஸ் கமிஷனர் தலைமையில் குழு அமைக்கப்பட்டிள்ளது. இந்த குழுவினர் விரிவான விசாரணை நடத்தி இன்னும் 4 வாரங்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்குமாறு உத்தரவிடப்பட்டுள்ளது என அமரிந்தர் சிங் தெரிவித்தார்.

முன்னதாக, இவ்விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தாருக்கு தலா 5 லட்சம் ரூபாய் இழப்பீடாக வழங்கப்படும் என நேற்றிரவு அமரிந்தர் சிங் அறிவித்திருந்தார்.

அதன் அடிப்படையில் இந்த தொகையை உடனடியாக அளிப்பதற்கு வசதியாக 3 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என செய்தியாளர்களிடம் அமரிந்தர் சிங் இன்று தெரிவித்தார். #AmritsarTrainAccident  #CaptainAmarinderSingh 
Tags:    

Similar News