செய்திகள்

திருப்பதியில் பிரம்மோற்சவ 9 நாள் விழாவில் ரூ.17.55 கோடி உண்டியல் வசூல்

Published On 2018-10-19 10:56 GMT   |   Update On 2018-10-19 10:56 GMT
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களில் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.17 கோடியே 55 லட்சம் வசூலாகியுள்ளது. #TirupatiTemple
திருமலை:

திருப்பதி ஏழுமலையான் கோவிலில் நவராத்திரி பிரம்மோற்சவ விழா கடந்த 10-ந்தேதி தொடங்கி 18-ந்தேதி வரை கோலாகலமாக நடந்தது. தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.

கோவிலில் மூலவரை தரிசனம் செய்யும் பக்தர்கள், கோவில் வளாகத்தில் உள்ள பிரதான உண்டியலில் காணிக்கை செலுத்தி வருகின்றனர்.

அந்த காணிக்கைகள் கோவில் வளாகத்திலேயே உடனுக்குடன் எண்ணப்பட்டு வருகின்றன.

10-ந் தேதியில் இருந்து 18-ந்தேதி வரை நடந்த நவராத்திரி பிரம்மோற்சவ விழாவின் 9 நாட்களில் உண்டியல் வருமானமாக மொத்தம் ரூ.17 கோடியே 55 லட்சம் வசூலாகியுள்ளது. 6 லட்சத்து 54 ஆயிரம் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 29 லட்சத்து 30 ஆயிரம் லட்டு விற்பனை யாகியுள்ளது.

தொடர்ந்து 4 நாட்கள் விடுமுறை என்பதால் திருப்பதியில் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இலவச தரிசனத்தில் அனைத்து குடோன்களும் நிரம்பி வழிகின்றன. பக்தர்களுக்கு தேவையான அடிப்படை விதிகளை தேவஸ்தானம் செய்துள்ளது. #TirupatiTemple
Tags:    

Similar News