செய்திகள்

அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் நீக்கம்

Published On 2018-10-16 07:52 IST   |   Update On 2018-10-16 07:52:00 IST
அந்தமான் நிக்கோபார் தீவுகள் செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகளை உள்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது.
புதுடெல்லி 

வங்காள விரிகுடா கடலில் உள்ள தீவுக்கூட்டங்களை கொண்டது அந்தமான் நிகோபார். சிறந்த சுற்றுலாத்தளமாக விளங்கும் அந்தமான்- நிகோபருக்கு வெளிநாட்டவர்கள் செல்ல வேண்டும் என்றால் வந்திறங்கிய 24 மணி நேரத்திற்குள் வெளிநாட்டவர் பதிவு அலுவலகத்தில் தங்களது விவரங்களை பதிவு செய்ய வேண்டும் என்ற விதிமுறை இருந்தது.

இந்த கட்டுப்பாட்டை தற்போது உள்துறை அமைச்சகம் நீக்கியுள்ளது. இதுதொடர்பாக பல்வேறு புகார்கள் மற்றும் ஆலோசனைகள் வந்ததை தொடர்ந்து இந்த நடவடிக்கையை உள்துறை அமைச்சகம் மேற்கொண்டிருக்கிறது.

முன்னதாக மனிதர்கள் வாழக்கூடிய 29 தீவுகளுக்கும், மனிதர்கள் வாழாத 11 தீவுகளுக்கும் வெளிநாட்டவர்கள் சுற்றுலா செல்ல அனுமதி அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. முன்பு இந்த இடங்களுக்கெல்லாம் செல்வதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. 
Tags:    

Similar News