செய்திகள்

பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு - வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகியோருக்கு அறிவிப்பு

Published On 2018-10-08 10:05 GMT   |   Update On 2018-10-08 10:05 GMT
பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வுக்காக வில்லியம் நார்தாஸ், பால் ரோமர் ஆகிய இரு விஞ்ஞானிகளுக்கு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. #NobelPrize
ஸ்டால்க்ஹோம்:

இயற்பியல், மருத்துவம், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் மகத்தான சாதனை படைத்தவர்களுக்கு ஆண்டுதோறும் நோபல் பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்படுகிறது. அவ்வகையில், 2018-ம் ஆண்டு பொருளாதாரத்துக்கான நோபல் பரிசு ஸ்டால்க்ஹோம் நகரில் இன்று அறிவிக்கப்பட்டன.

பருவநிலை மாற்றத்துடன் தொடர்புடைய பொருளாதார ஆய்வு மேற்கொண்ட வில்லியம் டி நார்தாஸ், பால் எம் ரோமர் ஆகிய இருவருக்கும் நோபல் பரிசு பகிர்ந்து அறிவிக்கப்பட்டுள்ளது. 
Tags:    

Similar News