செய்திகள்

பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை வெற்றி

Published On 2018-10-06 22:43 GMT   |   Update On 2018-10-06 22:43 GMT
அணு ஆயுதங்களை சுமந்து சென்று தாக்கும் பிருத்வி-2 ஏவுகணை இரவு நேர சோதனை நேற்று வெற்றிகரமாக நடைபெற்றது என அதிகாரிகள் தெரிவித்தனர். #PrithviMissile
புவனேஷ்வர்:

பிருத்வி - 2 ஏவுகணை அணுகுண்டு உள்ளிட்ட 1,000 கிலோ ஆயுதங்களை சுமந்து சென்று, 350 கி.மீ தூரமுள்ள எதிரிகளின் இலக்கை தாக்கி அழிக்கும் வல்லமை கொண்டது.

ஒடிசா மாநிலத்தின் பாலசோர் அருகில் உள்ள சண்டிப்பூரில் பிருத்வி-2 ஏவுகணை சோதனை நேற்று இரவு நடத்தப்பட்டது. மொபைல் லாஞ்சர் கருவியில் இருந்து செலுத்தப்பட்டதும், திட்டமிட்டபடி பறந்து சென்று இலக்கை பிருத்வி-2 ஏவுகணை வெற்றிகரமாக தாக்கி அழித்தது.

ஏவுகணைத் தாக்குதலின் துல்லியத் தன்மை உள்பட அனைத்து செயல்பாடுகளும், பாதுகாப்பு ஆராய்ச்சி மேம்பாட்டு முகமையின் கண்காணிப்பு நிலையங்கள், ரேடார் சாதனங்கள் உள்ளிட்டவற்றால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டன என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்தன.

ஏற்கனவே, பிருத்வி-2 ஏவுகணையின் இரவு நேர சோதனை கடந்த பிப்ரவரி 21-ம் தேதி நடத்தப்பட்டது. இந்த ஏவுகணை 2003-ம் ஆண்டு இந்திய பாதுகாப்புப் படையில் சேர்க்கப்பட்டது. குறிப்பிடத்தக்கது. #PrithviMissile
Tags:    

Similar News