செய்திகள்

காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலி

Published On 2018-10-05 13:46 IST   |   Update On 2018-10-05 13:46:00 IST
காஷ்மீரில் பயங்கரவாதிகள் துப்பாக்கி சூட்டில் 2 பேர் பலியான சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #JammuKashmir

ஸ்ரீநகர்:

காஷ்மீர் மாநிலத்தில் நாசவேலையில் ஈடுபடும் பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் வேட்டையாடி வருகிறார்கள்.

இதனால் ஆத்திரம் அடைந்த பயங்கரவாதிகள் சமீபத்தில் போலீஸ் நிலையத்தை குண்டு வீசி தாக்கினார்கள். துப்பாக்கியாலும் சுட்டனர். இதில் ஒரு போலீஸ்காரர் பலியானார்.

இந்த நிலையில் ஸ்ரீநகரின் மையப் பகுதியான கர்பாலி மொகல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் நுழைந்து துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர்.

இதில் 2 பேர் குண்டு பாய்ந்து பலியானார்கள். அவர்கள் இருவரும் தேசிய மாநாட்டு கட்சி தொண்டர்கள் என தெரிய வந்தது.

அரசியல் காரணங்களுக்காக அவர்களை பயங்கரவாதிகள் சுட்டுக் கொன்றனர். பயங்கரவாதிகளை போலீசார் தேடி வருகிறார்கள். #JammuKashmir

Tags:    

Similar News